Map Graph

சென்னை சாந்தோம் பேராலயம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேவாலயம்

சாந்தோம் பசிலிக்கா இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோத்திக் வகையாக அமைக்கப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Santhome_Basilica.jpgபடிமம்:SanThomeCathedralBasilica.jpgபடிமம்:Santhomechurch.jpgபடிமம்:Santhome_Basillica_hall.jpgபடிமம்:Ortona_-San_Tommaso-_2006_by-RaBoe_03.jpgபடிமம்:Ortona_2006_-San_Tommaso-_by-RaBoe_014.jpg